கடவுள்

கடவுள் படைத்த உலகமோ?
உலகம் படைத்த கடவுளோ?
அச்சத்தை போக்குவது கடவுளோ?
அச்சத்தில் பிறந்தது கடவுளோ?
நம்பிக்கையில் பிறந்தது கடவுளோ?
தன்நம்பிக்கையை பறிப்பது கடவுளோ?
மனிதனின் தேடல் கடவுளோ?
மனிதனின் தேவை கடவுளோ?
இறந்தபின் தான் கடவுளை காண இயலுமென்றால்,
இருக்கையில் வழிபாடு ஏனோ?
உயிர்களை படைத்த கடவுள்,
உணவுச்சங்கிலியை பின்னியது ஏனோ?
நிலையான கடவுள்,
நிலையில்லா மனிதர்களை படைத்தது ஏனோ?
முக்காலம் உணர்ந்த கடவுளுக்கு,
மனித மூளை எட்டவில்லையோ?
தன்னை மறக்கும் மனம்,
மனிதனுக்கு தந்தது ஏனோ?
பகுத்தறிவு நாடும் நாத்திகன் முட்டாளா?
நம்பிக்கை நாடும் ஆத்திகன் முட்டாளா?
நாத்திகன் பார்வைக்கு ஆத்திகன் முட்டாளோ?
ஆத்திகன் பார்வைக்கு நாத்திகன் முட்டாளோ?
கடவுள் பார்வைக்கு பாகுபாடு ஏனோ?
இல்லாததோ? இருப்பதோ?
தேடுவது தான் குற்றமோ?
எல்லாம் மாயை என்று கூரிய கடவுளும் மாயை தானோ?
கடவுளும் மாயை என்றால் கூறியது தான் யாரோ???

No comments:

Post a Comment