இழந்ததும் பெற்றதும்


இன்றைய,
இயல்பான வாழ்வினில்,
இயல்பான  மனிதனின்,
இயல்பான தேவைகளால் ஏற்படும்,
இயல்பான இழப்பை சொல்லும்,
இயல்பான கவிஞனின்,
இயல்பான கவிதை...

ஒன்றை இழந்தால் தான்
மற்றொன்றை பெறமுடியுமாம்,
அப்படித்தான் இழந்து இழந்து
பெற்றுக்கொண்டு  இருக்கின்றேன்...

அன்பு  இழந்து ஆளுமை பெற்றேன்,
பண்பு இழந்து பணத்தினை பெற்றேன்,
மரத்தினை இழந்து மனிதர்கள் பெற்றேன்,
அறிவினை  இழந்து அளவாக பெற்றேன்,
அறத்தினை இழந்து அனைத்தையும் பெற்றேன்...

வருமானம் இழந்து கல்வியை பெற்றேன்,
தன்மானம் இழந்து அந்தஸ்து பெற்றேன்,
சில ஒழுக்கம் இழந்து சில பழக்கம் பெற்றேன்,
கடவுளை இழந்து கவலைகள் பெற்றேன்,
காதலை இழந்து கண்ணீர் பெற்றேன்...

வியர்வைகள் இழந்து வியாதிகள் பெற்றேன்,
கற்பனை இழந்து கவிதைகள் பெற்றேன்,
கண்களை இழந்து கனவுகள் பெற்றேன்,
உண்மைகள் இழந்து உன்னப் பெற்றேன்,,
உணர்ச்சிகள் இழந்து இயங்கப் பெற்றேன்...

தமிழை இழந்து தான் வேலை பெறமுடியுமோ?
தமிழை இழந்து தான்  ஊதியம் பெறமுடியுமோ??
தமிழை இழந்து தான் வாழ்வை  பெறமுடியுமோ???

மனித இயல்பினை விடுத்து வாழ்ந்தாலும் வாழ்வேன்,
தமிழை விடுத்தது ...
 ஏதுமில்லை...

கடவுள்

கடவுள் படைத்த உலகமோ?
உலகம் படைத்த கடவுளோ?
அச்சத்தை போக்குவது கடவுளோ?
அச்சத்தில் பிறந்தது கடவுளோ?
நம்பிக்கையில் பிறந்தது கடவுளோ?
தன்நம்பிக்கையை பறிப்பது கடவுளோ?
மனிதனின் தேடல் கடவுளோ?
மனிதனின் தேவை கடவுளோ?
இறந்தபின் தான் கடவுளை காண இயலுமென்றால்,
இருக்கையில் வழிபாடு ஏனோ?
உயிர்களை படைத்த கடவுள்,
உணவுச்சங்கிலியை பின்னியது ஏனோ?
நிலையான கடவுள்,
நிலையில்லா மனிதர்களை படைத்தது ஏனோ?
முக்காலம் உணர்ந்த கடவுளுக்கு,
மனித மூளை எட்டவில்லையோ?
தன்னை மறக்கும் மனம்,
மனிதனுக்கு தந்தது ஏனோ?
பகுத்தறிவு நாடும் நாத்திகன் முட்டாளா?
நம்பிக்கை நாடும் ஆத்திகன் முட்டாளா?
நாத்திகன் பார்வைக்கு ஆத்திகன் முட்டாளோ?
ஆத்திகன் பார்வைக்கு நாத்திகன் முட்டாளோ?
கடவுள் பார்வைக்கு பாகுபாடு ஏனோ?
இல்லாததோ? இருப்பதோ?
தேடுவது தான் குற்றமோ?
எல்லாம் மாயை என்று கூரிய கடவுளும் மாயை தானோ?
கடவுளும் மாயை என்றால் கூறியது தான் யாரோ???

தீப ஒளி


தீப ஒளி திருநாள்...
மின்சாரம் இழந்த மாநிலத்தில்
தினம் தினம் தீப ஒளி திருநாள்...

ஆயினும்,
தினமும் இந்த உற்சாகம் இல்லையே
மகிழ்ச்சியோ, பகிர்தலோ, கொண்டாட்டம் இல்லையே.?

ஏன்?
தினமும் பட்டாசு வெடிக்க பொருளாதாரம் இல்லாததலா?
பலகாராம், புத்தாடை, தொலைகாச்சி நிகழ்சிகள் இல்லாததலா?
உறவினர்கள், நண்பர் கூட்டம், விடுமுறை இல்லாததலா?

காலசுழற்சியில்,
கால அட்டையை பார்த்து தானோ மகிழ்ச்சி வரும்?
அனைத்தையும் மறந்து ஓடிக்கொண்டு இரருக்கையில்,
அண்டை வீட்டை பார்த்து தானோ அன்பு வரும்?
விடுமுறை விட்டால் தானோ விடுதலை ?

ஏன்?
மகிழ்ச்சியை மனதில் புதைத்துவிட்டு ,
வெளியே ஏதேதோ கண்டு,
மகிழ்ச்சி இது தானோ என்று எண்ணி,
மகிழ்வது போல உலவி கொண்டு இருகின்றோம்...

இனி,
மனதில் விளக்கேற்றி, அறியாமையை கொளுத்தி,
நம்பிக்கையை உண்டு, அன்பை பருகி,
தினம் தினம் தீப ஒளி திருநாள் கொண்டாடுவோம்....

அழகு


என் விடைத்தாளை அழகு பார்க்க,
ஆசிரியருக்கு அவளவு ஆசை போலும்,
ஒவ்வொரு வரிக்கும் தீட்டுகிறார்,
சிவப்பு வர்ணம்...

சிரிப்பு


என்னை புதைக்க நீ தோண்டிய


அழகிய குழி


சிரிக்கும் பொழுது உன் கன்னத்தில்...

தீபாவளி


ஒரு நாள் கூத்திற்கு மீசை எடுப்பது போல


ஒரு நாள் மகிழ்சிக்கு உயிரை பரிகிரார்கள்


பட்டாசு தொழிற்சாலையில்...

மாற்றம்


மனிதன் முன்னேற்றத்தை நோக்கி பயனிகின்றான்,
விளைவு,
இயற்கை என்னும் சொல்லே செயற்கையாய் தோன்றிற்று...

முரண்

உனக்கு அடிமை என்று நீ படைத்தவை அனைத்தும்,
 உன்னை அடிமையாக்கி வருகின்றது.

வேலையில்லா திண்டாட்டம்


வேலையில்லா திண்டாட்டம்
தலைவிரித்தாட காரணம்
வேலையன்றி தவிபவர்கள்
ஆசிரியர் தொழில் தேர்வு செய்வதால்...

கல்வி



குழந்தை தொழில் கூட குற்றமல்ல


குழந்தைகளை கொண்டு தொழில்புரியும்


கல்வி நிருவனங்களினுடன் ஒப்பிடுகையில்...

கல்வி


வறுமையை ஒழிக்க,
அறியாமையை அழிக்க,
வியாபாரம் ஜொலிக்க,
பிறந்த கருவி...
இன்று,
வறுமைக்கும், அறியாமைக்கும்
காரணமாகி,
வியாபாரமும் ஆகிவிட்டது...

அலறல்



ஒரு குடும்பத்தின்,


அழுகுரல் கேட்கிறது,


அவசர ஊர்தியின் அலறலாக...

ஹைக்கூ


கவி பாடும் தளத்தில்
ஓவியம்
கண் மை!!!

புத்தகப் புதையல்


அடக்கம், அடக்கம்!
கைக்குள் அடக்கம்,
இவுலகம் கைக்குள் அடக்கம்,
நிலையான அடக்கம் கொடுக்கும்,
இது ஏழு உலகங்களையும் கடக்கும்,
புதியதோர் இனம் படைக்கும்,
சினம் துறந்த ஏழாம் அறிவு கொடுக்கும்.
இதயம் கூடுதலாய் துடிக்கும்
பல காலம் கூடுதலாய் துடிக்கும்.
பொல்லாத வினையை அறவே தடுக்கும்.
எந்த யுகத்திற்கும் ஏற்ற வியாபாரம்
ஆம் நான் கண்ட நட்டமில்லா ஒரே வியாபாரம்.
அல்ல அல்ல பெருகுமாம்,
கொடுக்க கொடுக்க செழிகுமாம்.
எழுதுகோல் மை உமிழ
எழுத்தர் கற்பனை மழை பொழிய
கருத்துகள் கவிதையை நீந்த
காகித மரங்கள் செழித்து வளர
மனிதன் கண்ட அற்புத புதையல்
-புத்தகப் புதையல்