இழந்ததும் பெற்றதும்


இன்றைய,
இயல்பான வாழ்வினில்,
இயல்பான  மனிதனின்,
இயல்பான தேவைகளால் ஏற்படும்,
இயல்பான இழப்பை சொல்லும்,
இயல்பான கவிஞனின்,
இயல்பான கவிதை...

ஒன்றை இழந்தால் தான்
மற்றொன்றை பெறமுடியுமாம்,
அப்படித்தான் இழந்து இழந்து
பெற்றுக்கொண்டு  இருக்கின்றேன்...

அன்பு  இழந்து ஆளுமை பெற்றேன்,
பண்பு இழந்து பணத்தினை பெற்றேன்,
மரத்தினை இழந்து மனிதர்கள் பெற்றேன்,
அறிவினை  இழந்து அளவாக பெற்றேன்,
அறத்தினை இழந்து அனைத்தையும் பெற்றேன்...

வருமானம் இழந்து கல்வியை பெற்றேன்,
தன்மானம் இழந்து அந்தஸ்து பெற்றேன்,
சில ஒழுக்கம் இழந்து சில பழக்கம் பெற்றேன்,
கடவுளை இழந்து கவலைகள் பெற்றேன்,
காதலை இழந்து கண்ணீர் பெற்றேன்...

வியர்வைகள் இழந்து வியாதிகள் பெற்றேன்,
கற்பனை இழந்து கவிதைகள் பெற்றேன்,
கண்களை இழந்து கனவுகள் பெற்றேன்,
உண்மைகள் இழந்து உன்னப் பெற்றேன்,,
உணர்ச்சிகள் இழந்து இயங்கப் பெற்றேன்...

தமிழை இழந்து தான் வேலை பெறமுடியுமோ?
தமிழை இழந்து தான்  ஊதியம் பெறமுடியுமோ??
தமிழை இழந்து தான் வாழ்வை  பெறமுடியுமோ???

மனித இயல்பினை விடுத்து வாழ்ந்தாலும் வாழ்வேன்,
தமிழை விடுத்தது ...
 ஏதுமில்லை...

No comments:

Post a Comment