காதல் கட்சி

காதலை புகழும் ஓர் அணி
காதலை இகழும் ஓர் அணி
இரண்டணியையும் ஆர்பரிக்கும்
பெரும்திறல் எப்பொழதும்
கூட்டத்தில் உள்ள அனைவரும்
கட்சி மாற்றத்திற்கு உட்பட்டவர்களே

காதல் அழிவதில்லை

மனிதர்கள் உள்ளவரை
காதல் இருக்குமாம்
ஆம்
மனிதர்களை ​ஒழிக்காது
ஓயாது காதல்

பயணம்

என்னை விரட்டும் மரணம்
வெற்றியை விரட்டும் நான்
யாரை யார் அடைவரோ

இருமை

சுற்றம் நட்பு உறவு
என்ற வட்டத்தின்
மையத்தில் எனை நிறுத்தி
அந்த மையத்தின் வசத்தில்
என் சிந்தை செயல் என
உறவுகளை கடக்கும் ஓர் நிலை

சுற்றம் நட்பு உறவு
எனும் நம்மை சார்ந்தவர்க்காக
அவர்களை குறித்து செயல்படுதல்
சிந்தித்தல் பழகுதல் என்றோர் நிலை
இந்த இரண்டிற்கு இடையிலும்
ஒளிந்து கொண்டு புன்னகை
புரிகிறது வாழ்க்கை

தாய்மொழி நாள்

வையத்து மக்களெல்லாம் தத்தமது
தாய்மொழியை கொண்டாடி மகிழ

வையத்து மொழிகளெல்லாம் தமது
தாய்மொழி தமிழயை கொண்டாடி
மகிழ்தல் காண்பீர் வையத்தீரே !!!