இருமை

சுற்றம் நட்பு உறவு
என்ற வட்டத்தின்
மையத்தில் எனை நிறுத்தி
அந்த மையத்தின் வசத்தில்
என் சிந்தை செயல் என
உறவுகளை கடக்கும் ஓர் நிலை

சுற்றம் நட்பு உறவு
எனும் நம்மை சார்ந்தவர்க்காக
அவர்களை குறித்து செயல்படுதல்
சிந்தித்தல் பழகுதல் என்றோர் நிலை
இந்த இரண்டிற்கு இடையிலும்
ஒளிந்து கொண்டு புன்னகை
புரிகிறது வாழ்க்கை

No comments:

Post a Comment