காலஞ்சென்ற கவிதை

 பதின்மத்தின் சாளரத்தில் 

சமூக சாலையை 

காணும் கணமெல்லம்

புத்தியிலே பூக்கும்

புரட்சிகர ​பூகம்பம்


உதிரும் உக்கிரம்

அடங்கா அகத்தினூடே

ஆங்காங்கே அள்ளித்

தெறிக்கும் எரிகுழம்பாய்

அமிலமழை கவிதைகள்


காகிதகருவி கொண்டு

ஆயுதப்போர் எடுக்க

ஆயத்தமான வேளையில்

அடகுவைக்க நேர்ந்தது

 உப்புபுளிக்கு மாற்றாக.


-01/12/2021

No comments:

Post a Comment